இலங்கைகான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் திரு டெனிஸ் சபி (Denis Chaibi) அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து யாழ். மறைமாவட்ட ஆயர் போரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களுடனான சந்திப்பொன்றை மோற்கொண்டிருந்தார்.

கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கின் தற்போதைய நிலைபற்றி இவர் ஆயருடன் கலந்துரையாடினார்.
அத்துடன் வடமாகாண புதிய ஆளுநர் திரு. ஜீவன் தியாகராஜா அவர்களும் அன்றைய தினம் யாழ். ஆயருடனான சந்திப்பொன்றை மேர்கொண்டிருந்தார். மாலை 5.00 மணிக்கு யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் யாழ் குடாநாட்டின் தற்போதைய நிலமை பற்றி இவர் ஆயருடன் கலந்துரையாடி ஆயரின் ஆசீரையும் பொற்றுக்கொண்டார்.

By admin