21சன.13. இறை திட்டம் தேடி அதனை நிறைவேற்ற நாம் முயற்சித்ல்தால்  எமக்கு எல்லாம் நிறைவாகக்  கிடைக்கும்,  இது புனித யோசே வாசின் வாழ்வு எமக்கு  உணர்த்தும்  செய்தி என்று புனித யோசே வாஸ் பணியாற்றிய சில்லாலையில் இன்று நடைபெற்ற புனித யோசே வாஸ் அண்டு நிறைவுதின நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்  குறிப்பிட்டார். புனித யோசெ வாஸ் ஆண்டு இறுதிநாள் நிகழ்வுகள் சில்லாலை  புனித கதிரை மாதா ஆலயத்தில் ஆரம்பமாகி, ஆரம்ப நிகழ்வுகளான கண்காட்சி, கருத்துப்பகிர்வுகள் அங்கு நடைபெற்றன.  மாலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து செபமாலை பவனியாக புறப்பட்டு அவர் பணியாற்றிய, தற்போது புனித யோசே வாஸ் திருத்தலம்  அமையவுள்ள இடத்திற்குச்  சென்று அங்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. ஆயர் தனது மறையுரையில் பொதுநிலையினர் திருச்சபையின் கரங்கள் என்றும், புனித யோசே வாசின்  கடினமான பணிக்காலத்தில் போதுநிலையினரலேயே அவர்பா பல ஆபத்துகளிலிருந்து  பாதுகக்கப்பட்டதையும்  சுட்டிகாட்டி பொதுநிலையினர் அர்ப்பணிப்புடன் திருச்சபையின் பணிகளில் இணைந்து செயற்பட வேண்டும் என்பதனையும் குறிப்பிட்டார்.

8 9

2 4 5 6 7 8 9 10 22 11 24 16 15 14 13 18 17

 

By admin