இறை அழைத்தலை குடும்பங்களில் ஊக்குவிக்குமுகமாக அமலமரித்தியாகிகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த மாதம் 25ம் திகதி முதல் 30ம் திகதி வரை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாறைமாவட்டங்களின் பல இடங்களிலும் நடைபெற்றது.
யாழ். அமலமரித் தியாகிகளின் அழைத்தலுக்கு பொறுப்பான இயக்குநர் அருட்தந்தை யூட் கறோவ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித் தியாகிகள் உயர் குருமட மாணவர்கள் யாழ் மறைமாவட்டத்தில் மணியம்தோட்டம், உரும்பிராய், மாதகல், மல்வம், குருநகர், தர்மபுரம் சக்கோட்டை ஆகிய பங்குகளிலும் மன்னார் மறைமாவட்டத்தில் புனித செபஸ்தியார் பேராலயம், கீளியன்குடியிருப்பு, கற்கிடந்தகுளம், புதுக்கமும் பிரதேசங்களிலுள்ள ஆலயங்களிலும் வங்காலை புனித ஆனாள் பாடசாலை, பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலயம், தோட்டவெளி மகா வித்தியாலயம், தாழ்வுபாடு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் “ஆளுமை விருத்தியும் இறை அழைத்தலும்” என்னும் கருப்பொருளில் பாசறை நிகழ்வுகளை மேற்கொண்டனர்.

By admin