இறந்த விசுவாசிகளை நினைவுகூர்ந்து வவுனியா இறம்பைக்குளம் சேமக்காலையில் 02ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியை அருட்தந்தை அந்தோணிதாஸ் டலிமா அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலி நிறைவில் கல்லறைகள் ஆசீர்வதிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin