இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டெனீசியஸ் அவர்களின் தலைமையில் 13ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
திருவிழாத் திருப்பலியை முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார். அன்னையின் வருடாந்ந திருவிழாவுக்கு ஆயத்தம் செய்யும் முகமாக முன்னெடுக்கப்பட்ட அன்னையின் திருச்சுருபம் தாங்கிய தேர்ப்பவனி சுற்றுப்பிரகாரம் 3ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
தொடர்ந்து 4ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி அங்கு நடைபெற்றுவந்த நிலையில் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணை பெருவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.