கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழாவிற்கு இவ்வருடம் இந்தியாவிலிருந்து வருகைதரும் பக்தர்கள் தமது யாத்திரையை நிறுத்தி இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்படுள்ள இந்திய மனவர்களை விடுவிக்கவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை அருட்தந்தை சந்தியாகு அவர்கள் எதிர்பாராத விதமாக இலங்கை கடற்படையினரால் இந்நிய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்க கோரி இந்தியாவில் படகு உரிமையாளர்கள் படகு ஓட்டுநர்கள், படகு சங்கங்கள் அனைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்களெனவும்ஆகவே இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைகளை தீர்க்க கோரி இவ்வருடம் கச்சதீவு திருப்பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

By admin