கிளிநொச்சி, பண்டத்திப்பு, புதுக்குடியிருப்பு பங்குகளில் அமைந்துள்ள ஆலயத்திரு விழாக்கள் அண்மையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளன.

முறிகண்டி, குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா 14ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. 09ஆம் திகதி கெடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆயத்த நாள் வழிபாடுகள் தினமும் மாலை 5.00 அங்கு நடைபெற்றதுடன் கூட்டொருங்கியக்கத் திரு அவையாக பயணிப்போம் எனும் தொனிப்பொருளில் மறையுரைகளும் இடம்பெற்றன. 13 ஆம் திகதி நற்கருணை விழா திருப்பலி பரந்தன் பங்குத்தந்தை அருட்பணி சகாயநாயகம் அடிகளாரின் தலைமையிலும், திருவிழா திருப்பலி சலேசியன் சபையைச் சேர்ந்த கிளிநொச்சி தொன்பொஸ்கோ நிறுவன இயக்குனர் அருட்திரு ஜெயபாலன் தலைமையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டன. அத்துடன் பண்டத்தரிப்பு, மாகியப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 20ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. நவநாள் வழிபாடுகளை நற்கருணைநாதர் சபையை சேர்ந்த அருட்திரு கிறிஸ்தோப்பர் அவர்களும் அமலமரிதியாகிகள் சபையை சேர்ந்த அருட்திரு அன்ரன் யஸ்ரின் அவர்களும் சிறப்பித்தார்கள். நற்கருணை விழா திருப்பலி அருட்திரு தேவராஜன் அவர்கள் தலைமையிலும்இ திருநாள் திருப்பலி பிரான்சிஸ் சவேரியார் பெரிய குருமட விரிவுரையாளர் நெவின்ஸ் அவர்கள்; தலைமையிலும் இடம்பெற்றன. மேலும் புதுக்குடியிருப்பு குழந்தை யேசு ஆலயத்திருவிழா 14ம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. திருவிழா திருப்பலி யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரெட்ணம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

By admin