ன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பேரருட்திரு இராயப்பு யோசப் அவர்களின் விண்ணக வாழ்வின் ஓராண்டு நினைவு நிகழ்வுகள் 02ஆம் திகதி மன்னார் மறைமாவட்டத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெனான்டோ அவர்களின் தலைமையில் நினைவுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து அருட்திரு ரவிச்சந்திரன் அவர்களினால் நினைவுப்போருரை நிகழ்த்தப்பட்டது. அத்துடன் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நினைவுப்போருரை நிகழ்வு அன்றைய தினம் மாலை 3.00 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றுது. தமிழ் தேசிய இருப்பில் இராயப்பு யோசப் ஆண்டகையின் வகிபாகம் என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறை தலைவர் பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள் உரைநிகழ்த்தினார். இந்நிகழ்வின் முதன்னை விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெனான்டோ அவர்களும் திருகோணமலை மட்டக்களப்பு ஓய்வுநிலை ஆயர் பேரருட்திரு கிங்சிலி சுவாம்பிள்ளை அவர்களும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்னம் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

By admin