யாழ் இந்தியத் துணைத்தூதுவர் திரு. பாலச்சந்திரன் அவர்கள் இலங்கையிலிருந்து மாற்றலாகி செல்வதை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இச்சந்திப்பு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கடந்த 26ஆம் திகதி திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

அத்துடன் யாழ். மாவட்டத்திற்கு இராணுவ கட்டளைத்தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு அவர்களும் தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு யாழ் ஆயர் அவர்களுடனான சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருந்தார் இச்சந்திப்பும் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 27ஆம் திகதி செவ்வாய்கிழமை அன்று நடைபெற்றது. இன்னும் வடமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளர் திரு. சமன் பந்துளசேன அவர்களும் ஆயர் அவர்களுடனான சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருந்தார் இச்சந்திப்பும் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

By admin