மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து இலங்கை அரச படையினரால் 1985ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட அருட்திரு மேரி பஸ்ரியன் அவர்களின் நினைவுநாள் 6ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அருட்தந்தை அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் இந்நிகழ்வு பங்குத்தந்தை அருட்திரு ஜெயபாலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குமக்களின் துணையுடன் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ஆயர் அவர்களினால் அமரர் அருட்திரு மேரி பஸ்ரியன் அவர்களின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அருட்தந்தையுடன் கொல்லப்பட்டவர்களின் நினைவாக தீபம் ஏற்றப்பட்டு அக வணக்கம் மேற்கொள்ளப்பட்டது.

By admin