இளவாலை புனித யாகப்பர் ஆலயப் பங்கைச் சேர்ந்தவரும் யாழ். மறைமாவட்டக் குருவுமாகிய அருட்தந்தை S.J ராஜநாயகம் அவர்கள் 06ஆம் திகதி திங்கட்கிழமை இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அருட்தந்தை ராஜநாயகம் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மறைமாவட்டப் பங்குகளில் அளப்பரிய பணியாற்றியதுடன் யாழ். பல்கலைக்கழக ஆன்மீகக் குருவாகவும் யாழ். அகவொளி குடும்ப நல நிலைய இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
அவருடைய காலத்தில்தான் அகவொளி குடும்பநல நிலையம் சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட்டு குடும்ப உளவியல், குடும்ப ஆன்மீகம், உளவள கற்கை நெறிகள் என்பன ஆரம்பிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எல்லோராலும் நேசிக்கப்படும் ஒரு குருவாக வாழ்ந்து அளப்பரிய பணிகள் ஆற்றிய அருட்தந்தையின் பணிவாழ்வுக்காக இறைவனுக்கு நன்றிகூறி அவரின் ஆன்மா இறைவனில் அமைதி பெற மன்றாடுவோம்.

By admin