யாழ் பொது நூலகம் சிங்கள காடையர்களால் எரியூட்டப்பட்டபோது அதனை பார்த்து மாரடைப்பால் மரணமடைந்த அருட்தந்தை தாவீது அடிகளாரின் 42ஆவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 1ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை தும்பளையில் அமைந்துள்ள அருட்தந்தையின் நினைவிடத்தில் நடைபெற்றது.
தும்பளை புனித மரியாள் சனசமுக நிலையத்தின் ஏற்பாட்டில் நிலைய தலைவர் ஜெயரத்தினம் கட்சன் அனோஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் அஞ்சலி நிகழ்வும் முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகளும் அருட்தந்தை தாவீது அடிகளாரின் பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் புலைமப்பரிசில் பரீட்சையிலும் சாதாரண தர பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்குமான பரிசில் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றன.
அருட்தந்தை தாவீது அடிகளார் தமிழ்மீது பற்றுக்கொண்டு கல்வியிலும் ஆராய்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தியவர் என்பதுடன் யாழ் பொது நூலகம் சிங்கள காடையர்களால் எரியூட்டப்பட்டபோது அதனை பார்த்து மாரடைப்பால் மரணமடைந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
       

By admin