முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதி நாளாகிய மே 18ஆம் திகதியன்று கொல்லப்பட்ட அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 15ஆவது வருட அஞ்சலி நிகழ்வு 18ஆம் திகதி இன்று சனிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற
இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்;தந்தை ஜெயக்குமார் அவர்கள் தலைமைதாங்கி திருப்பலி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து அகவணக்கம், அஞ்சலி உரை, ஈகைச்சுடர் ஏற்றல் என்பவற்றுடன் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

இந்நாளில் கொல்லப்பட்டு அங்கவீனர்களாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களோடு ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டிருந்தனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அவர்களும் ஒருவராவார்.

இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் போராளிகளின் சரணடைதலுக்கு உதவியாக இருந்த அருட்தந்தை அவர்கள் போராளிகளுடன் இணைத்து பேருந்து வண்டியில் கொண்டுசெல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin