இலங்கை அப்போஸ்தலிக்க கார்மேல் துறவற சபையை சேர்ந்த அருட்சகோதரி செபமலர் அவர்கள் 19 ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

இவர் தனது துறவற வாழ்வின் பணிக்காலத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் பங்குப்பணியுடன் கல்விப்பணியும் ஆற்றியவர். அத்துடன் இவர் யாழ் உரும்பிராய் பங்கின் முதலாவது அருட்சகோதரியாக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அருட்சகோதரியின் ஆன்மா இறைவனில் அமைதிபெற மன்றாடுவோம்.

By admin