ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் மகாவித்தியாலயத்தில் கடந்த 8 வருடங்கள் அதிபராக பணியாற்றி மாற்றலாகி செல்லும் அருட்சகோதரி கிறேஸ்மேரி ஸ்ரனிஸ்லஸ் அவர்களின் சேவைநலன் பாராட்டுவிழா 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை பங்கில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து அருட்சகோதரியின் சேவையை பாராட்டி வாழ்த்துப்பா இசைக்கப்பட்டு நினைவுப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டது.
அருட்சகோதரி கிறேஸ்மேரி ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் கல்வி பணியுடன் பங்கு பணியிலும் ஈடுபட்டு பங்கின் வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளாமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் புதிய அதிபராக நியமனம்பெற்ற அருட்சகோதரி நிர்மல றஞ்சினி பாலசிங்கம் அவர்கள் 1 ஆம் திகதி புதன்கிழமை தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

By admin