அருட்தந்தை அன்புராசா அவர்களின் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட அன்புள்ள ஆரியசிங்க நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 27ஆம் திகதி யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
யாழ் திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும், நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ. சற்குணராஜா, யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ் மாகாண அமலமரித்தியாகிகள் சபை முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக், கோப்பாய் ஞானவழி அருட்தந்தை செல்வரட்ணம், யாழ். போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி நளாயினி ஜெயதீசன், கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமாகிய திரு கருணாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமாகி இலங்கையின் தென்பகுதியை பரபரப்பாக்கிய வெகுஜனப் போராட்டத்தின் பின்னணியில் தென்னிலங்கையின் ஒரு போராட்டக்கார நண்பனுக்கு எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளதுடன் தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை தென்னிலங்கை மக்களுக்கு மட்டுமல்லாது முழு உலகிற்கும் எடுத்துச் சொல்வதாகவும் இந்நூல் அமைந்துள்ளது.

By admin