யாழ். புனித மரியன்னை பேராலய அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கும் நாவற்குழி புனித அற்புத அன்னை ஆலய மக்களுக்கும் இடையிலான அன்பிய களசந்திப்பு நிகழ்வு 7ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நாவற்குழி புனித அற்புத அன்னை ஆலயதில் நடைபெற்றது.
பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறைவார்த்தை பகிர்வும் அதனை தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் 50வரையானவர்கள் கலந்து பயனடைந்தனர்.