அங்கிலிக்கன் சபையை சேர்ந்த அமரர் அருட்பணியாளர் தனேந்நிரா அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவுதினத்யொட்டி முன்னெடுக்கபட்ட நினைவுகூரலும் நினைவுரைகளும் நிகழ்வு கடந்த 26ஆம் திகதி சனிக்கிழமை நல்லூர் பரிசுத்த யாக்கோபு அங்கிலிக்கன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட்பணியாளர் அவர்களின் உருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அஞ்சலி உரைகளும் வழங்கப்பட்டன.
துடிப்பு மிக்க “சமூக மற்றும் சமய நல்லிணக்க” செயற்பாட்டாளராக விளங்கிய அமரர் தனேந்திரா அவர்கள், இறையியல் பயின்று, அங்கிலிக்கன் சபை அருட் பணியாளராகப் பணியாற்றத் தொடங்கியிருந்தாலும், 35வயதிலே இறைவனடிசேர்ந்தார்.
அமரர் தனேந்திரா அவர்கள், எல்லாக் கிறிஸ்தவ சபைப் பிரிவினரோடும் நல்லுறவைப் பேணியது மட்டும் அல்லாமல், தனது சிறந்த எழுத்தாற்றல் மூலம் சமூகத்தில் நீதி, ஒருங்கிணைவு, பரிவிரக்கம் போன்ற விழுமியங்கள் வளரக் காத்திரமான பங்கற்றியவர்.
தெளிவு என்ற கிறிஸ்தவப் பத்திரிகைக்கு வித்திட்டு, அதன் ஆசிரியராக 40 இதழ்கள் வெளியிட்டதுடன் திருமறைக் கலாமன்றத்தின் “கலைமுகம்” இதழின் உதவி ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றியவர்.

By admin