இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை முன்னிட்டு அக்கராயன்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப்பவனி 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்கந்தபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஸ்ரனி சுவாம்கிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து நற்கருணைபவனி ஆரம்பமாகி 8ஆம் கட்டை ஆரோக்கியபுரம்அக்கராயன்குளம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தை சென்றடைந்தது.

அங்கு யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நற்கருணை ஆராதனை முன்னெடுக்கப்பட்டு சிறப்பு ஆசீர் வழங்கப்பட்டது.
பங்குத்தந்தை அருட்தந்தை சேகர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பவனியில் ஏராளமான மக்கள் பக்தியோடு பங்குபற்றினார்கள்.

By admin