கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் தனிக் கரோல் பாடல் மற்றும் பாலன்குடில் போட்டிகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வயது வேறுபாடின்றி விரும்பியவர்கள் இப்போட்டிகளில் பங்குபற்றமுடியும்.

பாடல் போட்டியில் பங்குபற்றுபவர்கள் 2.30 நிமிடங்கள் உள்ளடங்கலாக பாடலை பாடும்போது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்து 0741626719 என்ற இலக்க whatsapp செயலியூடாக அனுப்பவேண்டும்.
பக்கவாத்தியங்களை விரும்பினால் பயன்படுத்தலாம் ஆனால் பாடகரின் குரல் தெளிவாக இருக்கவேண்டும். போட்டியாளர்களின் வீடியோக்கள் யாழ் மறை அலை தொலைக்காட்சி தளத்தில்பதிவேற்றம் செய்யப்பட்டு நடுவர்களின் தீர்ப்போடு பார்வையாளர்களின் கருத்து, எண்ணிக்கைக்கு ஏற்ப போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

இப்போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்கள் மார்கழி மாதம் 05ஆம் திகதிக்கு முன்பாக வீடியோ பதிவை அனுப்பிவைக்கவேண்டும்.

அத்துடன் பாலன்குடில் போட்டியில் பங்குபற்றுபவர்கள் வீடுகளில் கிறிஸ்துபிறப்பு தினத்தில் அமைக்கும் குடில்களை அழகாக வடிவமைத்து அதனை கையடக்கத் தொலைபேசியால் வீடியோ பதிவு செய்து மார்கழி 26ஆம் திகதிக்கு முன்பாக whatsapp செயலியூடாக அனுப்பவேண்டும். பார்வையாளர்களின் விருப்பிற்கு ஏற்ப வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படுவர்.

By admin