Author: admin

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டெனிசியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 13 பிள்ளைகள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியாளர்களுக்கான தியானம்

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் பணியக பணியாளர்களுக்கான தியானம் 18ஆம் திகதி சனிக்கிழமை சுவிட்சலாந்து நாட்டின் ஓல்ரன் மாநகரிலுள்ள புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பணியக இயக்குநர் அருட்தந்தை முரளிதரன் அவர்களின் தலைமையில் அருட்பணிப் பேரவையினரின் ஒழுங்குபடுத்தலில்…

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் புனித டோமினிக்சாவியோ திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித டோமினிக்சாவியோ திருவிழா 19ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பீடப்பணியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அருட்சகோதரிகள்,…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டநிலையில் இரண்டாம் குழுவினருக்கான தியானம் கடந்த 20ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை யாழ். பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. நற்கருணை நாதர் சபையைச் சேர்ந்த அருட்தந்தை ஹெரல்ட் தாமல்…

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுதாக்குதலின் 30ஆம் ஆண்டு நினைவு

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது இலங்கை அரச விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுதாக்குதலின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு இதே தினம் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது…