யாழ். பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொது பட்டமளிப்பு விழா கடந்த 14,15,16ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற
இப்பட்டமளிப்பு விழாவில் கிறிஸ்தவ நாகரிகத்துறை மாணவர்களின் பெறுகைகள் இத்துறையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

இத்துறையில் புதிதாக 2 விருதுகள் உருவாக்கப்பட்டு கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாரிகத்துறையின் கிறிஸ்தவ கற்கைநெறி பட்பட்படிப்பில் இளம்கலைமாணி மற்றும் உயர்பட்டப்படிப்புக்களில் முதுகலைமாணி பட்டங்களைபெற்ற சிறந்த மாணவர்கள் ஒருவர் வீதம் தெரிவுசெய்யப்பட்டு முறையே புலவர் அமுது விருது மற்றும் தந்தை இம்மானுவேல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

புலவர் அமுது விருதை கிறிஸ்தவ இளம்கலைமாணி பட்டப்படிப்பில் செல்வி கெலன் வேளாஜினி அவர்களும் தந்தை இம்மானுவேல் விருதை கிறிஸ்தவ முதுகலைமாணி உயர்பட்பட்படிப்பில் செல்வி லக்சனா நட்சத்திரம் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் இப்பட்டமளிப்பு விழாவின் 5ஆவது அமர்வில் 6 மாணவர்கள் கிறிஸ்தவ நாகரிகத்துறையில் இளங்கலைமாணி பட்டத்தையும் 7ஆவது அமர்வில் கிறிஸ்தவ கற்கைநெறிகளில் முதுமாணி உயர்பட்டப்படிப்பின் முதலாம் அணியின் 36 மாணவர்கள் முதுகலைமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin