யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நான்கு தமிழ் மறைமாவட்டங்களும் இணைந்த, மேய்ப்புப் பணி மாநாடு ஒன்றை வருகின்ற ஆண்டு நடாத்ததுவதற்கு, வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
தற்போது இம்மறைமாவட்டங்களில் நடைபெற்றுவரும் உலக ஆயர்மாமன்ற தயாரிப்புப் பணிகளில் பெறப்படவுள்ள தரவுகளின் அடிப்படையில் இம் மேய்ப்புப்பணி மாநாடு ஒழுங்கமைக்கப்படவுள்ளது.
குறிப்பாக இலங்கையின் தமிழ்த் திரு அவையின் இருப்பு, வளர்ச்சி, ஒன்றிணைந்த செயற்பாடுகள் ஆகியவைபற்றி இம்மாநாட்டில் ஆராயப்படவுள்ளன.
நான்கு தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருக்கள் துறவியரின் பிரதிநிதிகளும், பொதுநிலைபிரதிநிதிகளும், துறைசார் பிரதிநிதிகளும் பங்குபற்றவுள்ள இம் மேய்ப்புப் பணி மாநாடு வருகிற ஆண்டு உயிர்த்த ஞாயிறுக்குப் பின்னர் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், இதற்கான திகதிகள், இடங்கள் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றத்தின் செயலாளரும் யாழ்ப்பாணம் மறைமாவட்டக் குருமுதல்வருமாகிய அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் யாழ். மறை அலை தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.

By admin