மடு அன்னையின் திருச்சுருபம் மறைக்கோட்ட ரீதியாக எடுத்துச்செல்லப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான மக்கள் இன, மத, மொழி கடந்து ஒன்றுகூடி அன்னையை வரவேற்று அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றுள்ளனர்.

கிளிநொச்சி திரேசம்மா ஆலயத்தில் பல்சமய தலைவர்கள் ஒன்றாக இணைந்து அன்னையை தரிசித்துள்ளனர். அத்துடன் கிளிநொச்சி, விசுவமடு, முல்லைத்தீவு, முள்ளியவளை ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான இந்து சமய மக்கள் ஒன்றாக இணைந்து அன்னையை வரவேற்று ஆசீரை பெற்றுக்கொண்டனர்.

மேலும் யாழ். மறைமாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள கொக்கிளாய் முகத்துவாரம் பங்கில் நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் ஓன்றுகூடி அன்னையை வரவேற்று அங்கு நடைபெற்ற வழிபாடுகளிலும் பங்குபற்றினர்.

அன்னையின் யாழ். மறைமாவட்ட திருப்பயணம் மத முரண்பாடுகளை களைந்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களின் தேவைகளை நிறைவேற்றி புதுமைகளை நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிக்க யாத்திரையாக அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin