கத்தோலிக்க மாணவர்களிடையே செபமாலை பக்தியை வளர்க்கும் நோக்கில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற
இந்நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவியான இலங்கை பரீட்சை திணைக்கள ஆணையாளர் திருமதி. ஜீவராணி புனிதா அவர்கள் கலந்து 100 மாணவர்களுக்கு செபமாலைகளையும், செபமாலை புத்தகங்களையும் வழங்கி மாணவர்களிடையே செபமாலை பக்திமுயற்சியை ஊக்குவித்தார்.