வட்டக்கச்சி பங்கில் மறைக்கல்வி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருவிவிலிய பரீட்சையை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இப்பாசறை நிகழ்வில் 98 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தார்கள். இச்சிறப்பு பாசறை நிகழ்வை மறைஆசிரியர்களும் அருட்சகோதரிகளும் வழிப்படுத்தியிருந்தார்கள்.

By admin