யாழ். மறைமாவட்ட மரியாயின்சேனை வருடாந்த ஆர்சேர்ஸ் விழா 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட இயக்குனர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை றெஜிராஜேஸ்வரன் அவர்கள் திருப்பலியை தலைமை தாங்கி நிறைவேற்றினார்.
இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட பங்குகளிலிருந்து 850 வரையான மரியாயின் சேனையினர் கலந்து சிறப்பித்ததுடன் கடந்த 20 வருடங்களாக யாழ். மறைமாவட்ட மரியாயின்சேனை இயக்குனராகப் பணியாற்றிய அருட்தந்தை றெஜிராஜேஸ்வரன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.