மன்னார் மருதமடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலிவிழா சிறப்பு நிகழ்வாக அன்னையின் திருச்சுருபம் கடந்த 6ஆம் திகதி யாழ். புனித மரியன்னை பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு யாழ். மறைமவாட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியை தொடர்ந்து மறைக்கோட்ட ரீதியாக பங்குகளுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றது.
யாழ்ப்பாணம், தீவகம், மறைக்கோட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்ட அன்னையின் சுருபம் தற்போது இளவாலை மறைக்கோட்ட பங்குகளுக்கு எடுத்துச்செல்லப்படுவதுடன் தொடர்ந்து பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மறைக்கோட்டங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டவுள்ளது. மேலும் வருகின்ற 21ஆம் திகதி நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு பங்குகளுக்கும் கொண்டுசெல்லப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அன்னையின் இப்பவனியில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து மத வேறுபாடின்றி அன்னையை தரிசித்து அன்னையின் ஆசீர் பெற்றுவருகின்றனர்.