இளவாலை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள மாரீசன்கூடல் பங்கில் முன்நாள் மறையாசிரியர்களை கௌரவிக்கும் சேவைநலன் பாராட்டுவிழா 16ஆம் திகதி கடந்த புதன்கிழமை சேந்தாங்குளம் கடற்ரையில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

திருப்பலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் 30 முன்னாள் மறையாசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதோடு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நடு நிலைய இயக்குனர் அருட்திரு ஜேம்ஸ் அவர்கள் மறைபணி என்பது வாழப்பட வேண்டியது மறையாசிரியர்களின் பணி முடிவுபெறும் பணியல்ல தொடரப்பட வேண்டிய பணியாகும் என குறிப்பிட்டார். பங்குதந்தை அருட்திரு கான்ஸ்போவர் அவர்களின் தலைமையில் மறையாசிரியர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

By admin