யாழ். மறைமாவட்ட திருத்தலங்களில் ஒன்றான புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
 
கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மருதங்கணி பிரதேசசெயலகத்தின் உதவியுடன் நடைபெற்ற இத்திருவிழா நிகழ்வில் திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
 
06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 08ஆம் திகதி நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை ஒல்பன் ராஜசிங்கம் அவர்கள் தலைமைதாங்கி நிறைவேற்றினார். திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin