கிளிநொச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்திற்கான புதிய அலுவலகமும் அங்கு அமைக்கப்பட்டுவந்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையமும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களினால் 18ஆம் திகதி சனிக்கிமை அன்று ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் இவ்வலுவலகமானது நிறுவனக்கட்டடத்தின் மேல்தளத்தில் இயங்கிவந்நது. இதனால் நோயாளர்கள், வயோதிபர்கள், மாற்றாற்றல் உடையோர் மேல்தளத்திற்கு ஏறிக்சென்று சேவைகள் பெறுவதில் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இக்குறையை நிவர்த்திசெய்யும் நோக்காக இப்புதிய அலுவலகம் கீழ்த்தளத்தில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையம் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தனை மேம்படுத்தும் நோக்காக்கொண்டு ஜேர்மன் நாட்டின் பொர்ளின் நகரிலுள்ள பக்ஸ் கிறிஸ்ரி {Pயஒ ஊhசளைவi} அமைப்பின் நிதி உதவியில் அமைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நிறுவனத்திக்கான புதிய அலுவலகத்தினை சிறப்பான முறையில் வடிவமைத்து பணிகளை மேற்கொண்ட புனித டொன் பொஸ்கோ சபையை சோர்ந்த அருட்திரு அசோக் அமலதாஸ் அவர்கள் ஆயரினால் பொன்னாடை போர்த்தி கௌவரவிக்கப்பட்டதுடன் கட்டிட பணிகளில் ஈடுபட்ட பல்துறைசார்ந்த பணியாளர்களும் பரிசில்கள் வழங்கி; கௌவரவிப்பட்டார்கள். கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்திரு சேபஜீவன் அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர்கள் கிளி-முல்லை பங்குத்தந்தையார்கள், நிறுவன இயக்குனார்கள், அருட் சகோதரிகள், கட்டிட பணிகளில் ஈடுபட்ட பல்துறைசார்ந்த பணியாளர்கள், நிறுவன பணியாளர்கள் என்போர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

By admin