பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மிகவும் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது.

17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆயத்தநாள் வழிபாடுகள் அங்கு நடைபெற்று 19ஆம் திகதி திருநாள் கொண்டாடப்பட்டது. திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.பல இடங்களிலுமிருந்து யாத்திரிகர்களாக வருகைதந்த குருக்கள், துறவியர் மற்றும் இறைமக்கள் பலரும் இத்திருவிழாவில் கலந்துகொண்டனர்.

By admin