பல்லவராயன் கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டி அருட்தந்தை மெல்வின் அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவன மைதானத்தில் நடைபெற்றது.
விடுதிக்கப்பாளர் பிரதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்போட்டியில் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இப்போட்டியில் நாச்சிகுடா சென். மேரிஸ் அணியை எதிர்த்து இழுப்பைக்கடவை அந்தோனியார் புர அணி விளையாடிய நிலையில் நாச்சிகுடா சென். மேரிஸ் அணி வெற்றிபெற்றது.

By admin