யாழ். மறைமாவட்டட மறைக்கல்வி நிலைய இயக்குனராக கடந்த காலங்களில் பணியாற்றி மாற்றலாகி செல்லும் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் பணி கௌரவிப்பு நிகழ்வும் புதிய இயக்குனராக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களினால் நியமனம்பெற்ற அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வும் 22ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கமும் யாழ். மறைக்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் தலைமைதாங்கி நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுத்ததுடன் இத்திருப்பலியின் போது யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் முன்னிலையில் புதிய இயக்குனரின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வும் நடைபெற்றது.
திருப்பலியை தொடர்ந்து அருட்தந்தைக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் கத்தோலிக்க ஆசிரியர்கள், மறைமாவட்ட மற்றும் பங்கு மறையாசிரியப் பிரதிநிதிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin