அளம்பில் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க திருஅவைக்கு சொந்தமான புனித இசிதோர் தோட்டத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

By admin