1

கிளி – முல்லை மறைக்கோட்ட இளைஞர்களுக்கான இரண்டாவது ஒன்றுகூடல் அலம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் கடந்த 19ம் திகதி ஆடி மாதம் 2016 அன்று நடைபெற்றது.

இந்த ஒன்றுகூடலில் மறைக்கோட்ட பங்குகளில் இருந்து 3 பிரதிநிதிகளைக் கொண்ட இளைஞர் குழு கலந்துகொண்டது.

ஆரம் நிகழ்வாக இளைஞர்கள் தொடர்பான சவால்கள், பிரச்சனைகள், வாழ்க்கை முறைகள் தொடர்பான நிகழ்கால விடயங்கள் பற்றிய உரையை அருட்தந்தை அன்புராசா அ.ம.தி. அவர்கள் ஆற்றினார். தொடர்நது மதியம் இளைஞர்களின் யதார்த்தமான வாழ்வு தொடர்பான கானாஒலி நிகழ்சி ஒன்றும், அதனைத் தொடர்ந்து மறைக்கோட்ட இளைஞர்களுக்கான மதாந்த கூட்டமும், இறுதியாக அலம்பில் பங்கு இளைஞர்களுக்கும், மறைக்கோட்ட இளைஞர்களுக்குமான சிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியும் நடைபெற்றது.

இதில் அனைத்து இளைஞர்களும் உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் இணைந்துகொண்டார்கள். இதை ஒழுங்குபடுத்திய மறைக்கோட்ட இளைஞர்களுக்கான இயக்குநர் அருட்தந்தை குயின்சன் அடிகளார் இளைஞர்கள் இப்படியான ஒன்றுகூடல்களில் கலந்து பயன்பெறவேண்டுமென்றும், அவர்களுக்கிடையிலான நல்ல உறவில் மேலும் வளரவேண்டுமெனவும் குறிப்பிட்டார். இறுதியாக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை றெக்னோ பேனாட் அடிகளாரும் இளைஞர்களை உற்சாகப்படுத்தி இன்னும் அவர்களுக்கான ஈடுபாட்டினை அதிகரிக்கும் இவ்வாறான செயற்பாடுகள் ஒழுங்குசெய்யப்படுமென்பதையும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த நிகழ்வில் தர்மபுர பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரீபன் அவர்களும், கூழாமுறிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களும், வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை கனிசியஸ் றாஜ் அவர்களும், கொக்கிளாய் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் அருட்தந்தை கொன்பியூசியஸ் அ.ம.தி அவர்களும் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தார்கள்

2

3

4

5

6

7

8

9

10

By admin