செல்வி ஜெயசிங்கரட்ணம் விதுசா அவர்களின் தயாரிப்பில் உருவான ‘ஆவணப்பேழை’ இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மத்தாயஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
செபமாலைதாசர் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜோண்சன் ராஜேஸ் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து இறுவட்டை வெளியீட்டுவைக்க மதிப்பீட்டுரையை யாழ். திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் திரு. ஜோண்சன் ராஜ்குமார் அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் வலிகாம வலயக்கல்வி பணிப்பாளர் திரு. பிறட்லி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கொழும்புத்துறை பங்குத்தந்தை அருட்தந்தை நீக்கிலஸ், J/63 கிராம சேவையாளர் திரு. சர்வேஸ்வரன், யாழ். பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திரு. ஜோண்சன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin