ஆரோபண சிறுவர் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த தேங்காய் பொச்சுமட்டையினை துளாக்கி இயற்கை பசளை உற்பத்தி செய்யும் தொழிற்கூடம் 20.06.2021 அன்று யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டைகையினால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.

தேங்காய் பொச்சுமட்டையினை துளாக்கி இயற்கை பசளை உற்பத்தி செய்யும் தொழில் நிலையத்தின் கட்டிட தொகுதியினையும் அதற்கான இயந்திரங்களையும் அமைப்பதற்கான நிதி உதவியினை ஜேர்மன் நாட்டின் பொர்ளின் நகரிலுள்ள “திருக்குடும்ப பங்கு திருஅவையினர்” நன்கொடையாக வழங்கியள்ளார்கள். ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இத்தொழிற்கூடம் ஆரோபண சிறுவர் இல்லத்தின் வருமானத்தினை பெருக்கவும் மாணவர்களுக்கான தொழிற் பயிற்சி மேற்கொள்ளும் நோக்கில் ஆரோபண சிறுவர் இல்ல முன்நாள் இயக்குனர் அருட்பணி யூட் அமலதாஸ் அடிகளாரின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டது.

By admin