அருட்தந்தை அன்புராசா அவர்கள் எழுதிய அன்புள்ள ஆரியசிங்க நூல் அறிமுக விழா கனடா ரொறன்ரோவில் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை ரோறன்ரோ பல்கலைக்கழக பேராசிரியர் அருட்தந்தை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரு. திருச்செல்வம், திரு. செல்வம் அருளானந்தம், திருமதி அனுசா பிறாயன், திரு. குயின்ரஸ் துரைசிங்கம் ஆகியோர் கலந்து கருத்துரையாற்றினார்கள். ஏராளமான கனடா வாழ் தமிழ் மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் கனடா திருமறைக்கலாமன்றத்தினரால் அருட்தந்தை அன்புராசா அவர்கள் மறைத் தமிழ் சுடர் விருதி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மும்மொழிகளிலும் பல விடயங்களை கடித வடிவில் உள்ளடக்கி கடிதங்களின் தொகுப்பாக உருவான இந்நூல் இவ்வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin