இலங்கை, மன்னார் மறைமாவட்டத்தின் மடுவீதியில் அமைந்துள்ள புனித சிந்தாத்திரை மாதா பங்குத் திருஅவை 5.08.2021 அன்று நற்கருணைநாதர் துறவற சபை குருக்களால் பொறுப்பேற்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு கிறிஸ்து நாயகம் ஆகியோரின் முன்னிலையில், இலங்கை நற்கருணை நாதர் சபையின் மாகாண முதல்வர் அருட்திரு டிலான் பெர்ணாண்டோ மற்றும் பிரதி மாகாண முதல்வர் அருதிரு ஜஸ்டின் சௌகான் ஆகியோர் இப்பங்கை பொறுப்பேற்றனர்.

நற்கருணை நதர் சபையானது, கத்தோலிக்க திருஅவையினால் ‘நற்கருணையின் அப்போஸ்தலர்” என்று அழைக்கப்படும் நற்கருணை நாதர்துறவற சபையின் ஸ்தாபகர் புனித பீட்டர் ஜூலியன் எய்மாட் அவர்களினால் 1856 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சபை இன்று 32 நாடுகளில் பரந்து விரிந்து பணியாற்றிவருகின்றது. 70 ஆண்டுளுக்குமுன் கொழும்பு புனித பிலிப் நேரியார் ஆலயத்தில் அவுஸ்திரேலிய நற்கருணைநாதர் சபை குருக்களால் பணி ஆரம்பிக்கப்பட்டடு தற்போது இலங்கையில் கொழும்பு உயர்மறைமாவட்டம், கண்டி, சிலாபம், அனுராதபுர, இரத்தினபுரி, காலி, யாழ்ப்பாணம் ஆகிய 08 மறை மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin