AFP6103191_Articoloடிச.23,2017. நெருங்கிவரும் கிறிஸ்து பிறப்பு விழாவைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், “கிறிஸ்மஸ் விழாவை பிணைக்கைதியாக வைத்திருக்கும் உலகப் போக்கிலிருந்து அதனை விடுதலை செய்வோம்! இறைவனால் அன்புகூரப்படுவதே, உண்மையான கிறிஸ்மஸ் விழாவின் அழகு” என்று கூறியுள்ளார்.

டிசம்பர் 25, இத்திங்களன்று கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவன்று, சாந்த் எஜிதியோ எனப்படும் பிறரன்பு அமைப்பு, வீடற்றோருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் ஒன்றை நிறைவேற்றும் என்று இவ்வமைப்பினர் அறிவித்துள்ளனர்.

உரோம் நகரின் Trastevere பகுதியில் அமைந்துள்ள அன்னை மரியா பசிலிக்கா வளாகத்தில் திங்கள் நண்பகல் 12 மணிக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.

மேலும், சாந்த் எஜிதியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள், இத்தாலியின் பல்வேறு நகரங்களில் 50,000த்திற்கும் மேற்பட்ட வறியோருக்கு கிறிஸ்மஸ் விழாவன்று உணவு வழங்கவும், அதேபோல், உலகின் 70 நாடுகளில் பணியாற்றும் இவ்வமைப்பினர், 2 இலட்சத்திற்கும் அதிகமான வறியோருக்கு உணவு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

By admin