ஒக்டோபர் 18 முதல் 22 வரை புனித யோசப்வாஸ் அடிகளாரின் அற்புதச் சிலுவை யாழ். மறைமாவட்டத்தில்

42970372_1814994005286380_1104334287638888448_n

02 October 2018 இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய  அற்புதச்சிலுவை யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு   ஒக்டோபர் மாதம் 18ம் திகதி எடுத்துவர  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் எல்லா மறைமாவட்டங்களுக்கும் எடுத்துச்செல்லப்படுகின்ற இந்தச் சிலுவை   ஒக்டோபர் மாதம் 18ம் திகதி முதல் 22ம் திகதிவரை  யாழ்ப்பாணம் மறைமவட்டத்தில் மறைக்கோட்ட ரீதியாக  பல்வேறு  பங்குகளுக்கு எடுத்துச் செல்வதற்கான ஒழுங்குகளை யாழ். மறைமாவட்ட புனித யோசப்வாஸ் குழு மேற்கொண்டுள்ளது. Continue reading ஒக்டோபர் 18 முதல் 22 வரை புனித யோசப்வாஸ் அடிகளாரின் அற்புதச் சிலுவை யாழ். மறைமாவட்டத்தில்

அருள்பணியாளர்கள், ‘சூப்பர்’ நாயகர்கள் அல்ல – திருத்தந்தை

cq5dam.thumbnail.cropped.750.422திருஅவையின் உறுப்பினர்களில் ஒருசிலர் செய்த தவறுகளால், திருஅவை என்ற படகு, தற்போது மிக வலுவான எதிர்காற்றைச் சந்தித்து வருகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த பிரான்ஸ் நாட்டு அருள்பணியாளர்களிடம் கூறினார். Continue reading அருள்பணியாளர்கள், ‘சூப்பர்’ நாயகர்கள் அல்ல – திருத்தந்தை

சாவகச்சேரி பங்கில் ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு

42974439_2264952720389612_2234933172171177984_nயாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவும் இளையோர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய குறும்பட போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்ட ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு 30.9.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய அரங்கில் சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வினை பங்கு இளையோர் ஒன்றியத் தலைவர் திரு.எமிலியன் குருசோ தலைமை தாங்கினார். Continue reading சாவகச்சேரி பங்கில் ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு

பருத்துறை புனித தோமையார் ஆலயத்தில் இளையோர் தினம்.

42381570_2260168524201365_706787806868930560_oபருத்துறை புனித தோமையார் ஆலயத்தில் 23.9.2018 ஞாயிற்றுக்கிழமை இன்று இளையோர் தின நிகழ்வும் மறைக் கல்விவார ஆரம்ப நிகழ்வும் சிறப்பான முறையில் நடைபெற்றன. இந் நிகழ்வுகளின் ஆரம்பத்தில் பங்கு இளையோர் ஒன்றிய கொடியும் மறைக் கல்வி மாணவர்களின் கொடியும், முறையே யாழ்ப்பாண மறை மாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் , பருத்துறை பங்குத்தந்தை அருட்திரு யாவிஸ் ஆகியோரால் ஏற்றி வைக்கப்பட்டன. Continue reading பருத்துறை புனித தோமையார் ஆலயத்தில் இளையோர் தினம்.

இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி

41799541_2254313828120168_7254465840462954496_nசெப்டம்பர் 16,, யாழ்ப்பாணம். 10.09 2018 தொடக்கம் 14.09.2018 வரை யாழ். மறை மாவட்ட இளையோர் ஒன்றியத்தால், இவ்வருடம் உயர் தரம் எழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நடத்தப்பட்டது. இதில் பங்குபற்றிய இளையோர் முழுமையான தலைமைத்துவ பயிற்சியை பெற்றனர். Continue reading இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி

தருமபுரம் புனித பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலய அபிஷேக திறப்பு விழா

41922937_2255441498007401_5409164744105918464_nசெப்டம்பர் 16, முல்லைத்தீவு மறைக்கோட்டத்தின் தருமபுரம் பங்கில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலய அபிஷேக திறப்பு விழாவும் புனிதரின் திருவிழாவும் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பங்குதந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரதாஸ் தலைமயில் இடம் பெற்றது . Continue reading தருமபுரம் புனித பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலய அபிஷேக திறப்பு விழா

கிறிஸ்தவரின் சக்திவாய்ந்த பணி, செபிப்பது – திருத்தந்தை

cq5dam.thumbnail.cropped.750.422 (2)“ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஆற்றக்கூடிய முதல் மறைப்பரப்புப் பணி, செபிப்பது. அதுவே மிகுந்த சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக ஆகஸ்ட் 29, இப்புதனன்று வெளியிட்டார். Continue reading கிறிஸ்தவரின் சக்திவாய்ந்த பணி, செபிப்பது – திருத்தந்தை

“திருத்தந்தை பிரான்சிஸ், குடும்பமும் மணமுறிவும்” – புதிய நூல்

cq5dam.thumbnail.cropped.750.422 (1)அன்பின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரை மடல், இரு உலக ஆயர்கள் மாமன்றங்களில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக உருவான மடல் – திருத்தந்தை பிரான்சிஸ்

‘அன்பின் மகிழ்வு’ (Amoris Laetitia) என்ற திருத்தூது அறிவுரை மடல், இரு உலக ஆயர்கள் மாமன்றங்களில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக உருவான மடல் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுநிலையினரும், இறையியலாளருமான Steven Walford என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Continue reading “திருத்தந்தை பிரான்சிஸ், குடும்பமும் மணமுறிவும்” – புதிய நூல்

கிளி, முல்லை மறைக்கோட்ட – மறையாசிரியர்களுக்கான ஒருவாரகால துரிதபயிற்சி

305.08.2018 லிருந்து 11.08.2018 வரையிலான காலப்பகுதியில், வருகின்ற ஆண்டு நடாத்தப்படவிருக்கும் மறையாசிரியர்களுக்கான மூன்று (3) மாத வதிவிடப் பயிற்சிக்கு தோற்றவிருக்கும் மறை ஆசிரியர்களின் தகமையை உயர்த்தும் நோக்குடன், துரிதபயிற்சி (Foundation Course) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில், நடாத்தப்பட்டது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மறைக்கோட்டங்களைச் சேர்ந்த பங்குகளிலிருந்து  (25) மறையாசிரியர்கள் இதில் கலந்துகொண்டார்கள். Continue reading கிளி, முல்லை மறைக்கோட்ட – மறையாசிரியர்களுக்கான ஒருவாரகால துரிதபயிற்சி

மரண தண்டனை மனித மாண்புக்கு எதிரானது-திருத்தந்தை பிரான்சிஸ்

cq5dam.thumbnail.cropped.750.422திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரண தண்டனை குறித்து, கத்தோலிக்க மறைக்கல்வி ஏட்டில் செய்துள்ள மாற்றம், விசுவாசத்தின் சாரத்தைத் தெளிவுபடுத்துவதற்கும், மனித மாண்பைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள முயற்சியாக உள்ளது என, பேராயர் ரீனோ பிசிகெல்லா (Rino Fisichella) அவர்கள் கூறியுள்ளார். Continue reading மரண தண்டனை மனித மாண்புக்கு எதிரானது-திருத்தந்தை பிரான்சிஸ்