முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவையின் அங்குரார்ப்பணக் கூட்டம் 9.3.2019 சனிக்கிழமை மறைக்கேட்ட முதல்வர் அருட்திரு ஜோர்ச் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் நடை பெற்றது. Continue reading முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவையின் அங்குரார்ப்பணம்
Author: admin
JAFFNA DIOCESE HAVE THREE DEACONS.
The Liturgical Ceremonies for Ordination to the Diaconate, Conferring of Ministries and Admission to Candidacy for Priesthood took place at St. Francis Xavier’s Seminary, Colombuthurai on Thursday, the 10th of January 2019 at 9.00 am.
Deacons: Bro. S.Ajith Sulaxshan, Bro. A. Liyans, Bro. M.Anton Jerad
முல்லைத்தீவு மறைகோட்ட மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா
05.01.2019 சனிக்கிழமை அன்று முல்லைத்தீவு மறைகோட்ட மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந் நிகழ்வு முல்லைத்தீவு மறைக்கோட்ட மறைக்கல்வி இணைப்பாளர் அருட்திரு மரியதாஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றதுடன் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் பிரதம விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார். முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்குகளிலிருந்து மறைக்கல்வி மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்து பங்குபற்றினர். Continue reading முல்லைத்தீவு மறைகோட்ட மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா
எழுவைதீவில் மகாஞானொடுக்கம்
எழுவைதீவு புனித தோமையார் ஆலய இறைமக்களுக்கான மகாஞானொடுக்கம் கார்த்திகை மாதம் 21ம் திகதி தொடங்கி மார்கழி மாதம் 21ம் திகதி வரை பங்குத் தந்தை அருட்திரு இராஜசிங்கம் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் மறையுரைஞர் குழாம் அருட்திரு போல் நட்சத்திரம் (அமதி ) அடிகளாரின் தலைமையில் மிகவும் சிறப்பானமுறையில் நடைபெற்றது. Continue reading எழுவைதீவில் மகாஞானொடுக்கம்
யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவின் புதிய கட்டடம்
யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவின் செயல்பாடுகளை விஸ்தரிக்கும் முகமாக இவ் ஆணைக்குழுவிற்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நட்டும் நிகழ்வு 20.12.2018 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு மறைக்கல்வி நடுநிலைய வளாகத்தில் நடைபெற்றது. மறைக்கல்வி நடுநிலைய வளாகத்தில் அமையவுள்ள இக்கட்டடத்திற்கான அடிகல்லை யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞாப்பிரகசம் ஆண்டகை நாட்டிவைத்தார்.
Continue reading யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவின் புதிய கட்டடம்
மறையாசிரியர் பயிற்சிக்கான முன் ஆயத்த வகுப்பு – 2018
2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மறையாசிரியர்களுக்கான மூன்று (3) மாத வதிவிடப் பயிற்சிக்கு தோற்றவிருக்கும் மறை ஆசிரியர்களின் தகமையை உயர்த்தும் நோக்குடன், 2018 கார்த்திகை 18ம் திகதியிலிருந்து 24ம் திகதி வரை ஒருவாரகால துரிதபயிற்சி (Foundation Course) யாழ்ப்பாணம் மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சில் யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்துறை மறைக்கோட்டங்களைச் சேர்ந்த 28 பயிற்சியாளர்கள் பங்குபற்றினார்கள். Continue reading மறையாசிரியர் பயிற்சிக்கான முன் ஆயத்த வகுப்பு – 2018
வரலாற்றின் 150 ஆவது ஆண்டுக்குள் தடம்பதிக்கும் யாழ்ப்பாணம் புனித மாட்டீனார் சிறிய குருமடம்
12 November 2018. யாழ்ப்பாணம் மறைமாவட்ட புனித மாட்டீனார் சிறய குருமட திருவிழா 11.11.2018 ஞாயிற்று கிழமை குருமட அதிபர் அருட்பணி. பாஸ்கரன் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. முற்பகல் 11.00 மணிக்கு திருநாள் திருப்பலி யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேனாட் ஞானபிரகாசம் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மாட்டீனார் குருமட கொடியேற்றல் நிகழ்வும் குருமடத்தின் யூபிலி ஆண்டை ஆரம்பிக்கும் நினைவு சின்ன திரை நீக்கமும் இடம்பெற்றன. Continue reading வரலாற்றின் 150 ஆவது ஆண்டுக்குள் தடம்பதிக்கும் யாழ்ப்பாணம் புனித மாட்டீனார் சிறிய குருமடம்
இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை மன்னார் மறைமாவட்டத்தில்
12 October 2018. இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை திருகோணமலை மறைமாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி எடுத்துவரப்பட்டு கொக்கிளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னைமர வாடி என்னும் இடத்தில் வைத்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சிலுவை யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைதீவு, கிளிநொச்சி, பருத்துறை, இளவாலை, தீவகம், யாழ்ப்பாணம் ஆகிய ஆறு மறைக்கோட்டங்களுக்கும் எடுத்துசெல்லப்பட்டு சில குறிப்பட்ட ஆலயங்களில் தரித்துவைக்கப்பட்டு திருப்பலிகளும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து இச்சிலுவை மன்னார் மறைமாவட்டத்திற்கு எடுத்துசெல்லும் முகமாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரினல் மன்னார் மறைமாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள வெள்ளங்குளம் பிரதேசத்தில் வைத்து மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி இம்மானுவல் பெர்னாண்டோ அவர்களிடம் 22.10.2108 இன்று காலை கையளிக்கப்பட்டது. Continue reading இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை மன்னார் மறைமாவட்டத்தில்
இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில்
19 October 2018 இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி நேற்றைய தினம் எடுத்துவரப்பட்டுள்ளது. திருகோணமலை மறைமாவட்டத்திலிருந்து இச்சிலுவை எடுத்து வரப்பட்டு கொக்கிளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னைமர வாடி என்னும் இடத்தில் வைத்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரிடம் ஒப்படைக்கப்பட்டது. Continue reading இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில்
இலங்கை திருச்சிலுவை கன்னியர்களுக்கு புதிய மாகாணத் தலைவியும், புதிய மாகாண நிர்வாகமும்
09.9.2018 யாழ்ப்பாணம்.கடந்த ஆவணி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நீர் கொழும்பு தலுவகொட்டுவாவில் அமைந்துள்ள திருச்சிலுவை கன்னியர் மாகாண உயர் இல்லத்தில் நடந்தேறிய பொது அமர்வில் அருட் சகோதரி ரொபினா பவுலின் மாகாண தலைவியாக தெரிவு செய்யப்பட்டு 4.10.2018 அன்று தமது பணிப்பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். Continue reading இலங்கை திருச்சிலுவை கன்னியர்களுக்கு புதிய மாகாணத் தலைவியும், புதிய மாகாண நிர்வாகமும்