‘கலைமுகம்’ கலை இலக்கிய சமூக இதழ்

திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் ‘கலைமுகம்’ கலை இலக்கிய சமூக இதழின் ஏப்பிரல் – செப்ரெம்பர் 2021 காலப்பகுதிக்குரிய 72 ஆவது இதழ் வெளிவந்துள்ளது. திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநராகவும், ‘கலைமுகம்” இதழின் பிரதம ஆசிரியராகவும் இருந்து கடந்த ஏப்பிரல் அமரத்துவமடைந்த கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகளாரின் நினைவுகளின் சில பக்கங்களைச் சுமந்து வந்துள்ள இந்த இதழில், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நூல் மதிப்பீடுகள், அஞ்சலிகள் போன்ற பல்வேறு விடயங்களும் இடம்பெற்றுள்ளன. கலைமுகம் இதழ் கடந்த 32 ஆண்டுகளாக தெடர்ச்சியாக திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் – புதிய குருக்கள்

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மூன்று திருத்தொண்டர்கள் 11.09.2021 சனிக்கிழமை அன்று புதிய குருக்களாக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிராகாசம் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.

யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் கோவிட் – 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக ஆயர் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தால் திருச்சடங்கு திருப்பலியில் தியாக்கோன்களான யேசுதாசன் அமிர்தராஜ், பிரான்சிஸ் மனோகரன் பிரகாஸ் நிஜந்தன், வெலிச்சோர் வொலன்ரைன் மொறிஸ் ஆகியோர் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள். இப்புதிய அருட்பணியாளர்கள் இறை யேசு வழியில் நல் மேய்ப்பர்களாக பணியாற்ற வாழ்த்துக்களை தொரிவித்துக்கொள்கின்றோம்.

Continue reading யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் – புதிய குருக்கள்

‘சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்’ மெய்நிகர் வழியிலான விரிவுரை

யாழ்ப்பாணம் பல்கலைகழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் ‘சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்’என்ற தலைப்பில் நடைபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் இரண்டாம் உரை 01.09.2021 புதன்கிழமை பிற்பகல் 7.00 மணிக்கு நடைபெற்றது. ‘தமிழ் கிறிஸ்தவ இறை அனுபவ வளர்ச்சி’ என்ற தலைப்பில் அருட்திரு எஸ்.ஜே. இம்மானுவேல் அவர்கள் தமது உரையை நிகழ்த்தினார்.

Continue reading ‘சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்’ மெய்நிகர் வழியிலான விரிவுரை

‘முல்லையின் முத்துக்கள்’ தொகுப்பு நூல் வெளியீடு

‘முல்லையின் முத்துக்கள்’ என்ற தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 30.08.2021 கடந்த திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு திருக்குடும்ப முன்பள்ளியில்; நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி அன்ரனிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருக்குடும்ப யாழ் மாகாணத் தலைவி தியோபன் குரூஸ் கலந்து கொண்டார்.
திரு மரியான் சூசைமுத்து அவர்கள் 2012ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையிலும் பாதுகாவலன் பத்திரிகை, திருக்குடும்ப யாழ்.மாகண சகோதரிகளினால் வெளியிடப்படுகின்ற சங்கமம்இ உறவின் பாலங்கள் சஞ்சிகை போன்றவற்றிற்கு எழுதிய கவிதைஇ கட்டுரை ஆக்கங்களின் தொகுப்பே ‘முல்லையின் முத்துக்கள்’ ஆகும்.

மண்டைதீவில் முதியோர் மகிழ்வகம்

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய 125ஆவது யூபிலி ஆண்டை முன்னிட்டு மண்டைதீவு பிரதேசத்தில் பங்கு மக்களால் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடுகளின் ஒரு அங்கமாக மண்டைதீவு பிரதேசத்தில் “முதியோர் மகிழ்வகம்” ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 31.08.2021 கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு இடம்பெற்றது. மண்டைதீவு பங்குத்தந்தை அருட்திரு. டேவிற் அவர்களால் இக்கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மண்டைதீவு திருஅவையின் விசுவாச வாழ்வுக்கான அடித்தளத்தையிட்டு பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு பக்காலமாக இருந்த இப்பங்கின் மூத்தோரை கௌரவிப்பதற்காகவும் மாலை நேரங்களில் அவர்கள் ஒன்று கூடி ஓய்வு நேரத்தை மகிழ்வுடன் கழிப்பதற்காகவும் இம்மகிழ்வகம் அமைக்கப்படவுள்ளது. இம்மகிழ்வக கட்டிடத்திற்கான நிதி உதவியை அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் இப்பங்கைச்சார்ந்த ஒருவர் வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடதக்கது.

வன்னி பெருநிலப்பரப்பில் இறை தியான இல்லம்

வன்னி பெருநிலப்பரப்பில், மாங்குளம் குழந்தை இயேசு கிராமத்தில் அமையப்பெற உள்ள இறை தியான இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புனித மரியன்னையின் பிறப்பு விழாவாகிய 08.09. 2021 கடந்த புதன்கிழமை அன்று இடம்பெற்றது. அருட்திரு மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் கட்டட அமைவிடத்தை ஆசீர்வதித்து இறைதியான இல்லத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். முல்லைத்தீவு மறைக்கோட்ட குரு முதல்வர் அருட்தpரு அன்ரனிப்பிள்ளை அவர்களும், முன்னை நாள் குருமுதல்வர் அருட்பணி யாவீஸ் அவர்களும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்கள்.

Continue reading வன்னி பெருநிலப்பரப்பில் இறை தியான இல்லம்

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் 400வது ஜூபிலி ஆண்டு அங்குரார்ப்பணம்

யாழ்ப்பணம் புனித அடைக்கல அன்னை ஆலயத்திருவிழா, புனித கன்னிமரியாவின் பிறப்புப் விழாகிய 08.09.2021 கடந்த புதன்கிழமை அன்று யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி அன்னையின் கொடியேற்றததுடன் ஆரம்hமாகிய நவநாள் வழிபாடுகள் தினமும் மாலை 5.00 மணிக்கு அங்கு இடம்பெற்றது. திருநாளுக்கு முதல் நாள் நற்கருணை ஆராதனை திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். ஆயர் தலைமையில் நடைபெற்ற திருநாள் திருப்பலியை தொடர்ந்து புனித அடைக்கல அன்னையின் திருச்சொரூப ஆசீர் இடம்பெற்றதுடன் அன்னையின் பிறப்பு நாள் திருவிழா, போர்த்துக்கேயர் காலத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் கொண்டாடத் தொடங்கியதன் 400 வது யூபிலி ஆண்டை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

Continue reading யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் 400வது ஜூபிலி ஆண்டு அங்குரார்ப்பணம்