புனித வெள்ளி சிலுவைப்பாதை – திருத்தந்தையின் இறுதி செபம்

cq5dam.thumbnail.cropped.750.422இன்றைய உலகில் துன்புறும் அனைவரும் சுமந்து செல்லும் சிலுவைகளில் இயேசுவின் சிலுவையைக் காணும் வரத்திற்காக செபிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சியின் இறுதியில் கூறினார்.

உரோம் நகரின் கொலோசெயம் திடலில், வெள்ளி இரவு, 9.15 மணிக்குத் துவங்கிய சிலுவைப்பாதையை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை, அந்த பக்தி முயற்சியின் இறுதியில் கூறிய செபத்தின் தமிழ் மொழியாக்கம் இதோ:

ஆண்டவராகிய இயேசுவே, உலகின் அனைத்து சிலுவைகளிலும் உமது சிலுவையைக் காண எங்களுக்கு உதவியருளும்: Continue reading புனித வெள்ளி சிலுவைப்பாதை – திருத்தந்தையின் இறுதி செபம்

மறையாசிரியர்களுக்கான மூன்று மாதகால வதிவிடப் பயிற்சி – 2019

20190412_085450யாழ்ப்பாண மறைமாவட்ட பங்குகளில் மறைக்கல்வி கற்பிக்கும் மறையாசிரியர்களுக்கான மூன்று மாதகால வதிவிடப் பயிற்சி தை மாதத்திலிருந்து சித்திரை மாதம் வரையான காலப்பகுதியில் யாழ். மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது. பல்வேறு பங்குகளிலிருந்தும் 21 மறையாசிரியர்கள் இப்பயிற்சியில் பங்குபற்றினார்கள். இப்பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 13.04.2019 சனிக்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலையத்தில் இயக்குனர் அருட்திரு பெனற் அடிகளார் தலைமையில் இடம் பெற்றது. Continue reading மறையாசிரியர்களுக்கான மூன்று மாதகால வதிவிடப் பயிற்சி – 2019

புதுக்குடியிருப்பில் ‘பலிக்களம்’ திருப்பாடுகளின் காட்சி.

IMG_0420முல்லைத்தீவு மறைக்கோட்டம் யாழ்.திருமறைகாலமான்றத்துடன் இணைந்து வழங்கிய ‘பலிக்களம்’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு ஜோர்ச் அடிகளாரின் தலைமையில் மறைகோட்ட குருக்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்வாற்றுகையில் 160 ற்கும் அதிகமான அப்பிரதேச வாழ் கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். முல்லைத்தீவு மறைகோட்ட பங்குகளிலிருந்து 4000 ற்கும் அதிகமான மக்கள் பக்தி உணர்வோடு இதில் இணைந்து கொண்டனர். Continue reading புதுக்குடியிருப்பில் ‘பலிக்களம்’ திருப்பாடுகளின் காட்சி.

பொதுநிலை நற்கருணைப் பணியாளர்களுக்கான ஆன்மீக வலுப்படுத்தல்

56931897_2395848357300047_5906304515673423872_nபொதுநிலை நற்கருணைப் பணியாளர்களுக்கான ஆன்மீக வலுப்படுத்தும் நிகழ்வு 07.04.2019 ஞாயிற்றுக் கிழமை யாழ். மறைக் கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு மவுலிஸ் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மறை மாவட்டத்தில் பல பங்குகளில் பணியாற்றும் பொதுநிலை நற்கருணைப் பணியாளர்கள் கலந்து பயனடைந்தர்கள் . Continue reading பொதுநிலை நற்கருணைப் பணியாளர்களுக்கான ஆன்மீக வலுப்படுத்தல்

மறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம் -2019

53845614_2379909408893942_3682581057820950528_nயாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை ஆகிய மறைக்கோட்டங்களைச் சேர்ந்த மறையாசிரியர்களுக்கும், கத்தோலிக்க ஆசிரியர்களுக்குமான தவக்கால தியானம் 16.03.2019 சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் 12.30 மணிவரை யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில், யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்திரு பெனற் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. Continue reading மறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம் -2019

முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவையின் அங்குரார்ப்பணம்

54520617_2375698205981729_7927535289315098624_nமுல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவையின் அங்குரார்ப்பணக் கூட்டம்  9.3.2019 சனிக்கிழமை மறைக்கேட்ட முதல்வர் அருட்திரு ஜோர்ச் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் நடை பெற்றது. Continue reading முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவையின் அங்குரார்ப்பணம்

முல்லைத்தீவு மறைகோட்ட மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா

x05.01.2019 சனிக்கிழமை அன்று முல்லைத்தீவு மறைகோட்ட மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந் நிகழ்வு முல்லைத்தீவு மறைக்கோட்ட மறைக்கல்வி இணைப்பாளர் அருட்திரு மரியதாஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றதுடன் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் பிரதம விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார். முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்குகளிலிருந்து மறைக்கல்வி மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்து பங்குபற்றினர். Continue reading முல்லைத்தீவு மறைகோட்ட மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா

எழுவைதீவில் மகாஞானொடுக்கம்

aஎழுவைதீவு புனித தோமையார் ஆலய இறைமக்களுக்கான மகாஞானொடுக்கம் கார்த்திகை மாதம் 21ம் திகதி தொடங்கி மார்கழி மாதம் 21ம் திகதி வரை பங்குத் தந்தை அருட்திரு இராஜசிங்கம் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் மறையுரைஞர் குழாம் அருட்திரு போல் நட்சத்திரம் (அமதி ) அடிகளாரின் தலைமையில் மிகவும் சிறப்பானமுறையில் நடைபெற்றது. Continue reading எழுவைதீவில் மகாஞானொடுக்கம்

யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவின் புதிய கட்டடம்

2யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவின் செயல்பாடுகளை விஸ்தரிக்கும் முகமாக இவ் ஆணைக்குழுவிற்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நட்டும் நிகழ்வு 20.12.2018 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு மறைக்கல்வி நடுநிலைய வளாகத்தில் நடைபெற்றது. மறைக்கல்வி நடுநிலைய வளாகத்தில் அமையவுள்ள இக்கட்டடத்திற்கான அடிகல்லை யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞாப்பிரகசம் ஆண்டகை நாட்டிவைத்தார்.

Continue reading யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவின் புதிய கட்டடம்