IMG_6267மார்ச்,22.2018. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையானயாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் தவக்கால ‘வெள்ளியில்  ஞாயிறு’ திருபாடுகளின் காட்சி இன்று  மாலை 6.45 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களின் ஆசீர் செய்தியுடன் மன்ற அரங்கில்   ஆரம்பமானது.

வியாழன், சனி, ஞாயிறு தினங்களில் மாலை 6.45 மணிக்கு ஆரம்பமாகும் திருப்பாடுகளின் காட்சி வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி போன்றவற்றுடன் அரங்கிலும் அரங்கப் பின்னணியிலுமாக இருநூறுக்கும் அதிகமான கலைஞர்கள் இதில் இணைந்துள்ளனர்.

திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரியசேவியர் அடிகளார் திருப்பாடுகளின் நாடகப் பாரம்பரியத்தினை தமிழ் மரபுக்குரிய தனித்துவங்களுடன் வளர்த்து வந்துள்ளார். இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு என்ற மும்மையை மையமாகக் கொண்டு இந்நாடகங்கள் எழுதப்பட்டாலும் அவற்றிற்குள் காலத்திற்கு ஏற்ப பல்வேறு கோணங்களையும் பாடுபொருள்களையும் உட்புகுத்தி இவ் ஆற்றுகைகள் மேடையேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு மேடையேற்றப்படும்  ‘வெள்ளியில்  ஞாயிறு’ திருப்பாடுகளின் நாடகத்திற்கான எழுத்துருவை திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் யோ.யோண்சன் ராஜ்குமார் எழுதியுள்ளார்.

ஆண்டுதோறும் திருமறைக் கலாமன்றத்தால் மேடையேற்றப்படுகின்ற திருப்பாடுகளின் காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிடுகின்றமையும் இலங்கையிலேயே இடம்பெறுகின்ற மிகப்பெரிய அரங்க ஆற்றுகையாக இது அமைகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறைமகன் இயேசு மானிடர் அனைவரினதும் பாவத்தைக் கழுவ அவர் மனிதனாக பிறந்து, பாவ நிவாரணமாக அவர் தன்னையே தற்கொடையாக்கினார். அவரது பாடுகளும், பிறருக்காக தன்னையே அளிக்கும் தற்கொடையான மரணமும், உயிர்ப்பும் மனித வாழ்வியலுக்குரிய மேல் வரிச்சட்டங்கள். அதனை மீளவும் வலியுறுத்தும் படைப்பாக்கமே ‘வெள்ளியில்  ஞாயிறு’.

 

IMG_5567 IMG_5560 IMG_5592 IMG_5602 IMG_5605 IMG_5632 IMG_5637 IMG_5665 IMG_5673 IMG_5725 IMG_5743 IMG_5757 IMG_5773 IMG_5783 IMG_5813 IMG_5822 IMG_5844 IMG_5824 IMG_5845 IMG_5882 IMG_5888 IMG_5895 IMG_5903 IMG_5919 IMG_6002 IMG_6039 IMG_6061 IMG_6087 IMG_6172 IMG_6177 IMG_6180 IMG_6213 IMG_6223 IMG_6269 IMG_6318 IMG_5585

 

 

By admin