திருமறைக் கலாமன்ற தினத்தை முன்னிட்டு யாழ். திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கபட்ட சிறப்பு நிகழ்வு 03ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. யாழ். மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை போல் நட்சத்திரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியோடு நிகழ்வுகள் அங்கு ஆரம்பமாகின. திருப்பலியை தொடர்ந்து மன்ற அலுவலகத்தில் கொடியற்றப்பட்டு கலைத்தூது மணிமண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது. மேலும் மாலை 4.00 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் யாழ். பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் தலைமையில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பெட்டக நிழலுரு கலைக்கூட இயக்குநர் அருள்சந்திரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளின் நடனங்கள்இ மற்றும் கலைஞர் கௌரவிப்பு என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வான ‘ஏகலைவன்’ தென்மோடி நாட்டுக்கூத்தும் மேடையேற்றப்பட்டது. மன்றத்தின் ஸ்தாபக இயக்குனர் அருட்தந்தை நீ. மரியசேவியர் அடிகளாரின் பிறந்த தினமாகிய டிசம்பர் 3ஆம் திகதி வருடந்தோறும் இத்தினம் சிறப்பிக்கப்படடுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin