Rev. Fr. Maria Xavier received Kampan Reward

கொழும்புக் கம்பன் கழக முன்னாள் செயலர் அமரர் பொன் பாலசுந்தரம் நினைவு விருதான கம்பக் கலாநிதி. இரா இராதகிருஷ்ணன் விருது கடந்த 12. 2. 2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அருட்பணி. மரிய சேவியர் அடிகளாருக்கு வழங்கப்பட்டது.
இவ் விழா கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணன் மண்டபத்தில் கடந்த 09. 02. 2017ம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை முழு நாட்களும் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வில் கம்பன் வெள்ளவத்தை காலி வீதியிலிருந்து இராமகிருஷ்னன் மண்டபம் வரை ஊர்வலமாக வலம் வந்தது. இந்நிகழ்வில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து வந்த பேராசிரியர்கள், அமைச்சர்களும் பங்கு கொண்டனர்.
இந்நிகழ்விலேயே அருட்பணி. மரிய சேவியர் அடிகளாருக்கு கம்பன் நினைவு விருதும், தங்கப் பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Rev. Fr. Maria Xavier (1) Rev. Fr. Maria Xavier (2) Rev. Fr. Maria Xavier (3) Rev. Fr. Maria Xavier (4) Rev. Fr. Maria Xavier (5)

By admin