TCNL Convocation (1)
பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் மூலம் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகத்தில் Visual communication இளகலைமாணி பட்டம் மற்றும் Mass media & Communication முதுகலைமாணி பட்டம் பெறும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று 22.02.2017 யாழ். சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிறீம் கவுஸ்) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வு நிலை யாழ். ஆயர் மேதகு கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையும் சிறப்பு விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கைகள் இணைப்பாளர் கலாநிதி எஸ். ரகுராமும், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துனணவேந்தர் பொன். பாலசுந்தரம்பிள்ளையும், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் கலாநிதி யோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளாரும், லண்டன் கொட்டேல் மரியா ஜயில் ஒவ் வைற் உரிமையாளர் திரு. திருமதி அருளானந்தம் ஜெயராசா யசிந்தா புஸ்ப்பமும் கலந்து சிறப்பித்தனர்.
பட்டமளிப்பு விழாவில் 2012 – 2015 ஆண்டுக்கான ஊடகக்கற்கை இளங்கலைமாணி மாணவர்களாக அல்பேட் பெஸ்ரியன், அருந்தவச்செல்வன் அனித்டிறொக்ஷன், சுந்தரம்பிள்ளை ராஜேஸ்கரன், வெற்றிவேல் துஷ்யந்தன், அல்பிறெட் பொறிஸ்பெக்கர், தயாராணி துரை, கிறிஸ்துராசா ஜெகன், கருணைநாதன் ஆன் நிரோஜா, சுஜிதா துரைராஜா ஆகியோரும் 2015 – 2016 ஊடகக்கற்கை முதுகலைமாணி மாணவர்களாக அருட்திரு பாலதாஸ் பிரையன் மற்றும் நித்தியானந்தன் கஜிதரன் ஆகியோருக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டது.

TCNL Convocation (3) TCNL Convocation (4) TCNL Convocation (5) TCNL Convocation (6) TCNL Convocation (7) TCNL Convocation (8) TCNL Convocation (11) TCNL Convocation (10) TCNL Convocation (9) TCNL Convocation (13) TCNL Convocation (12) TCNL Convocation (14) IMG_3560

By admin