இலங்கையில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தவறியமை குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இலங்கை ஆயர்கள் பேரவை 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அறிக்கையென்றை வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தவறியமை குறித்து இலங்கை ஆயர்கள் பேரவை அதிர்ச்சியடைந்துள்ளதை குறிப்பிட்டு இவ்விடயத்தில் தாமதம் மட்டுமன்றி உண்மையை மறைக்கவும், படுகொலையை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தவும், பிரச்சினைகளைச் சிக்கலாக்கவும் முயற்சிகள் நடப்பதாகத் தோன்றுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி சர்வதேச உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

By admin